குருநாதசாமி கோவில் விழாவில் விதிமீறி பார்க்கிங் கட்டணம் வசூல்
- விதிமீறி வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடித்தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு வரும் வாகனங்களில் வருவேரிடம் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டது.
ஆனால் கடந்த 13-ந் தேதி விடுமுறை நாளிலும் விதிமீறி வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறியதாவது, கடந்த 12-ந் தேதி ஆடித்திருவிழா முடிந்தாலும் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலுக்கு ஆயிரக்கண க்கானேர் வந்தனர்.
இவர்களிடம் விதிமீறி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர் என்றனர்.
இது குறித்து அந்தியூர் யூனியன் அதிகாரி ஒருவர் கூறும்போது,
திருவிழா நடந்தது 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மட்டுமே வாகனங்களுக்கு வசூல் செய்ய வேண்டும். அதை மீறி வசுலித்து இருந்தால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றார்.