உள்ளூர் செய்திகள்
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு
- ஈரோடு மாவட்டத்தில் 28 நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
- விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டிருந்தனர்.
ஈரோடு:
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 28 நேரடி கொள்முதல் நிலையங்களில் சரக துணை கண்காணிப்பா ளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமை யில், போலீசார் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறையீடு நடைபெறுகிறதா? என்பது குறித்து விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் வந்த விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டிருந்தனர்.
மேலும் நெல் கொள்முதல் நிலை யங்களில் பணி யாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை யும் வழங்கினர்.