உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 281 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

Published On 2022-06-24 10:03 GMT   |   Update On 2022-06-24 10:03 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு:

பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் 8 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக பணியிடத்தில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பதவி உயர்வு மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நிரப்பபடும் பொழுது தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News