உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்க முடிவு

Published On 2023-06-22 09:29 GMT   |   Update On 2023-06-22 09:29 GMT
  • மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
  • விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மரகத மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் மாநில மரமும், தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது பனை மரம். நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.

மண்ணுக்கு உகந்த மரமாக விளங்குவதுடன் அடி முதல் நுனி வரை பயனளித்து வாழ்வாதாரம் தருகிறது.

எனவே பனை சாகுபடியை ஊக்குவிக்க, ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் 30 ஆயிரம் மற்றும் நாற்றுகள் 250 வினியோகம் செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கத்தை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News