கயிறு வாரியம் செய்யும் உதவியை பயன்படுத்தி வளர்ச்சி அடையலாம்
- பாசம் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பில் இந்திய அரசு கயிறு வாரியத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு அமைச்சகம் சார்பில் வார விழா நடந்தது.
- பர்கூர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர கயிறு வாரியம் செய்யும் உதவி, மாவட்ட தொழில் மையம் உதவி செய்தல் குறித்து அதனை பயன்படுத்தி மலைவாழ் பகுதி மக்கள் தங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி தாமரை க்கரையில் பாசம் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பில் இந்திய அரசு கயிறு வாரியத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு அமைச்சகம் சார்பில் வார விழா நடந்தது.
மாவட்ட தொழில் மையம் ஆய்வாளர் பிரபு தலைமை தாங்கினார். தாமரைக்கரை வனக்காப்பாளர் சீனி வாசன் முன்னிலை வகி த்தார். பாசம் தொண்டு நிறு வன நிர்வாக இயக்குனர் பாசம் மூர்த்தி வரவேற்றார்.பர்கூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் செல்வராஜ் வாழ்த்தி பேசினார்.
தஞ்சாவூர் கயிறு மண்டல விரிவாக்க மைய அலுவலர் சத்தியன், தஞ்சாவூர் நார் சார்ந்த பயிற்சி அலுவலர் முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவர்கள் பேசும் போது, பர்கூர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர கயிறு வாரியம் செய்யும் உதவி, மாவட்ட தொழில் மையம் உதவி செய்தல் குறித்து அதனை பயன்படுத்தி மலைவாழ் பகுதி மக்கள் தங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தினை பயன்படுத்த வேண்டும் என கூறினர்.
முடிவில் தஞ்சாவூர் கயிறு வாரியம் மகேந்திரன் நன்றி கூறினார்.