பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
- கூடுதுறை பகுதியில் இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
- கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொட ர்ந்து கடந்த 2 நாட்களாக பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்ட நிலையில் பொது மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறை காவேரி, பவானி, அமுதநதி கூடும் முக்கூடல் சங்கத்தில் உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.