உள்ளூர் செய்திகள்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-29 09:26 GMT   |   Update On 2023-06-29 09:26 GMT
  • பவானி போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
  • இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.

பவானி:

பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு பவானி போலீசார் ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பவானி புதிய பஸ் நிலையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.

இந்த பேரணியில் பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, போலீ சார் மற்றும் பவானி, மயிலம்பா டி, சித்தோடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் என 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகள் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தியும், எமதர்மராஜா, மது பாட்டில், சிகரெட் போன்ற வேடம் அணிந்தும் பொதுமக்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News