1,600 வீடுகளுக்கு குப்பைத்தொட்டிகள்
- செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
- 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த குளூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குப்பைத்தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு தலைவர் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழை ப்பாளராக மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு கிராமங்கள்தோறும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ஊராட்சியில் உள்ள சுமார் 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.
இதில் தோட்டக்காடு நல்லப்பகவுண்டர் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரோஜா, ஊராட்சி செயலாளர் வெ ங்கடாசலம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல துணை தாசில்தார் கலைவாணி நன்றி கூறினார்.