- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சாஸ்திரிநகர் திருவள்ளுவர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மயிலானந் (23). இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் மயிலானந் மனஉளைச்ச–லுடன் இருந்து வந்தார். அவரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்ததால் மயிலானந்த்திற்கு அவரது தந்தை மற்றும் சகோதரி ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மயிலானந் அவரது சகோதரியை போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அடிக்கடி அம்மா நியாபகம் வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி உள்ளார். அதற்கு அவர் ஐதராபாத்துக்கு சென்றுள்ள தந்தை வீட்டுக்கு திரும்பியதும் பேசிக்கலாம் என்று கூறினார்.
இந்நிலையில், அன்றைய தினம் மாலையே வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மயிலானந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மயிலானந் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.