பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
- உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.
- உணவு பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் சமையலறை, மூலப்பொருட்கள் இருப்பு அறை மற்றும் உணவு கூடம் ஆகிய இடங்களில் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி தரமான மூலப் பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மூலப் பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை மற்றும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்களை கவனித்து வாங்கி, காலாவதி தேதி முடியும் முன்பே அதனை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
மூலப் பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். உணவு பொருட்களையும், உணவு பொருள் அல்லாத பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி தொற்று நடவடி க்கைகள் சீரான இடை வெளிகளில் மேற்கொ ள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் தலைக் கவசம், முகவுரை, கையுறை, ஏப்ரன் போன்ற உணவு பாதுகாப்பு கவசங்களை அணிந்து தன் சுத்தம் பேணுவதுடன், தொற்று நோய் தடுப்பு நடவடி க்கைகள் மேற்கொ ண்டதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்தி ருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை மூடி வைத்து உடனுக்குடன் நோயாளிகளுக்கு வழங்குவதுடன், ஒவ்வொரு முறையும் அதில் உணவு மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி உதவி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.கண்ணன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் உடன் இருந்தனர்.