பெருந்துறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
- கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது.
பெருந்துறை:
பெருந்துறையில் விநாயகர் சதுர்த்தியை விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பெருந்து றை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும்.
சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாதுகாப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி வைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் பெருந்துறை, சென்னிமலை மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய போலீஸ் நிலையம் பகுதிகளில் விழா ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.