- மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குட்கா விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஈரோட்டை அடுத்து உள்ள ஆர்.என்.புதூர் ராகவேந்திரா நகரில் உள்ள முத்துராஜா (29) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 45 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த மளிகை கடை அரசு பள்ளிக்கூடம் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் நூர் முகமது (35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மளிகை கடையை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 10 குட்கா (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.