உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-06-08 08:38 GMT   |   Update On 2023-06-08 08:38 GMT
  • எந்த நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
  • தற்போது இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

ஈரோடு, 

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஈரோட்டில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு ரெயில் நிலையம் எந்த நேரமும் பயணிகள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.

இங்கு காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தற்போது வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரோட்டோரம் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருவதால் வழக்கத்தை விட தற்போது இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

குறிப்பாக காலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்று அணிவகுத்து செல்கின்றன. தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் வாகன நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

ரெயிலை பிடிக்க செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News