ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டில் 10 ஆயிரம் பேர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை
- ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.
- இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.
ஈரோடு:
ஒரே நபர் இரு ரேஷன் கார்டு வைத்திருப்பதும், ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டில் பயனாளிகளாக இருப்பதை தவிர்க்கவும், ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பி னர்களின் அனை வரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.
இதில் அரிசி கார்டு 6 லட்சத்து 72 ஆயிரத்து 670. அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 66,235 ஆகும். காவலர் கார்டுகள் 1,572 ஆகும். சர்க்கரை கார்டு 18, 181 ஆகும்.
முதியோர் அரிசி கார்டு 4,794 ஆகும். அன்னபூர்ணா அரிசி கார்டு 23 ஆகும். எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கான கார்டு 1,346 ஆகும்.
இந்த காடுகளில் 20 லட்சத்து 81 ஆயிரத்து 780 உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.
இவர்களின் விபரத்தை சேகரித்து இணைக்கும் முயற்சியில் வட்ட வழங்கல் அலுவலர்க ள் ஈடுபட்டுள்ளனர். ஒரு வேளை அவர்களின் பெயர் வேறு கார்டில் இருந்தா லும், அவர் இறந்திருந்தாலும் விரைவில் பெயர் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.