ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது
- ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
- இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.