உள்ளூர் செய்திகள்

காளிங்கராயன் பாசத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2023-06-28 09:26 GMT   |   Update On 2023-06-28 09:26 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது.
  • காளிங்கராயன் பாசனத்திற்கு இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும்

தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று அணைக்கு வினாடிக்கு 1, 247 கன அடி நீர் வந்தது. ஆனால் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று வரை காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும்,

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News