பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,521 கன அடியாக அதிகரிப்பு
- நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று 4, 169 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,100 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. காலி ங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்ப ட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.10 அடியாக உள்ளது.