உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9500 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-09-12 10:13 GMT   |   Update On 2022-09-12 10:13 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
  • கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

ஈரோடு:

பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாவனிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடி எட்டியதால் அணை யில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டது. இதையடுத்து மழை குறைந்த தால் அணைக்கு வரும் நீர் குறைந்தது.

இந்த நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவ தால் பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விட ப்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இது படிப்படியாக உயர்ந்து இன்று 9500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

மேலும் அணையில் இருந்து 9500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப் பரித்து செல்கிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணையில் இருந்து காளிங்க ராயன் வாய்க்காலுக்கு 300 கனஅடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க் காலுக்கு 1750 கனஅடியும், ஆற்றில் 7450 கனஅடி தண்ணீர் என மொத்தம் 9500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

தண்ணீர் அதிகம் திறப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அணையில் இருந்து அதி களவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது.

இதையொட்டி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்திலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

இதையொட்டி அணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News