பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,100 கன அடியாக குறைந்தது
- நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மழைப்பொழிவு இல்லாத போது நீர் வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.