உள்ளூர் செய்திகள்

உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

Published On 2023-09-22 09:51 GMT   |   Update On 2023-09-22 09:51 GMT
  • சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் அந்தியூர் பேரூராட்சி இணைந்து அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் உணவகங்களில் கலர் பொடி, அர்ச்சனா பவுடர், பழைய இறைச்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்தனர். அந்தியூரில் 15 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய சமைத்த உணவு 5 கிலோ, பழைய மீன் 2 கிலோ, கலர் பவுடர், பழைய புரோட்டா உள்ளிட்டவைகளை கைப்பற்றி அளிக்கப்பட்டது.

மேலும் உணவின் தரம் பற்றி புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News