செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 8 சதவீதமாக அதிகரிப்பு
- சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் ஏ.டி.எம். கார்டு பெறலாம்.
- வாடிக்கையாளர்களின் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும்.
ஈரோடு:
ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி ப்பாளர் கருணா கரபாபு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசு சார்பில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொ டரில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளது.
இதன்படி பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புதிய 2 ஆண்டு சேமிப்பு திட்டம் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் அறிமுகம் செய்துள்ளது.
மாதாந்திர வட்டி திட்டமான எம்.ஐ.எஸ். கணக்கின் முதலீட்டு தொகைக்கான உச்சவரம்பு தனி நபருக்கு 9 லட்சம் ரூபாயாகவும், கூட்டு கணக்குக்கு 15 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களு க்கான சேமிப்பு திட்டத்து க்கான முதலீட்டு தொகை உச்ச வரம்பானது 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாக இருந்த அஞ்சல் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகத்தில் 500 ரூபாய் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் ஏ.டி.எம். கார்டு பெறலாம். காசோலை புத்தகம், இணைய வங்கி சேவை, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி 7.5 சதவீதமாக உயர்ந்ததால் வாடிக்கையாளர்களின் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும். மூத்த குடிமக்களின் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு காலாண்டு வட்டியாக 2,050 ரூபாயாக கிடைக்கும்.
பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆண் குழந்தைகள் உட்பட அனைவருக்குமான பொன்மகன் பொது வருங்கால வைப்பு கணக்குகளை தொடங்கி நெடுங்கால சேமிப்பை செயல்படுத்த லாம்.
கூடுதல் விபரத்துக்கு அருகே உள்ள அஞ்சலகங்களையும், அந்தந்த பகுதி தபால்காரரையும் அணுகலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.