கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
- லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது
- எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்
ஈரோடு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி, கிரஷர் மற்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறியதாவது:- எங்களது சங்கத்தின் மா நில நிர்வாக குழுக் கூட்டத்தின் முடிவின்படி, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
ஈரோடு மாவட்டத்தில் 16 கல்குவாரிகள், 1,500 லாரிகள் உள்ளன.இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எனவே, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து இத்தொழிலையும், அதை நம்பியுள்ளோரையும் பாதுக்காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.