போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு
- அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
- அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்வதாகவும், மேலும் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறுகள் ஏற்படுத்தியும் வந்தனர்.
இதனால் இந்த பகுதி களில் அடிக்கடி விபத்து க்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் அந்தியூர் போக்குவரத்து போலீசாரி டம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வாகன உரி மையாளர்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களில் நிறுத்தி விட்டு வந்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நில வியது.