உள்ளூர் செய்திகள்

மரவள்ளி கிழங்கு ஒரு டன் 13 ஆயிரத்துக்கு விற்பனை

Published On 2023-03-31 09:39 GMT   |   Update On 2023-03-31 09:39 GMT
  • மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
  • ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைக்கு மொத்த மாக மரவள்ளி கிழங்கு வாங்கி சென்று ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்கின்றனர்.

இவை தவிர கேரளா, புதுச்சேரி, தமிழகத்தில் பரவலாகவும் மரவள்ளி கிழங்கை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். சிப்ஸ் உள்ளிட்ட தின்ப ண்டங்கள் தயாரி ப்புக்கும் பயன்படுத்து கின்றனர்.

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாக இருந்தாலும் பிற காலங்களிலும் ஓரளவு மரவள்ளி கிழங்கு வரத்தாகும். தற்போது சீசன் முடிந்து பல பகுதிகளிலும் மரவள்ளி கிழங்கு நடவு செய்து வருகின்றனர்.

இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-

தற்போது சீசன் நிறை வடைவதால் 10 சதவீத த்துக்கும் குறைவாகவே மரவள்ளி கிழங்கு பயிர்கள் உள்ளன. அவற்றில் இருந்து அறுவடை செய்யப்படும் கிழங்கில் 70 சதவீதம் சேகோ ஆலைகள் ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

மறுபுறம் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உணவு பயன்பாடு, சிப்ஸ் போன்றவை தயாரிப்புக்காக ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர்.

வரும் மாதங்களில் இதைவிட அறுவடையும், வரத்தும் குறையும். வரும் நவம்பர் மாதம் மீண்டும் சீசன் தொடங்கும்.

தற்போது 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,750-க்கும், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு மூட்டை ரூ.4,800-க்கும் விற்பனையாகிறது.

சீசன் நேரத்தில் இந்த விலை இருந்திருந்தால் விவசாயிகள் கூடுதல் பயன் பெற்றிருப்பா ர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News