உள்ளூர் செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மினிமாரத்தான் போட்டி
- 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.
பெருந்துறை,
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெருந்துறையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்பு ணர்வு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மராத்தான் ஓட்டம் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தொடங்கி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பொதுமக்கள் சுற்றுச்சூழல் குறித்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.