மாயமான தொழிலாளி காளிங்கராயன் வாய்க்காலில் பிணமாக மீட்பு
- இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே பாசூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜா (48) தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தனதுதாயார் துளசி மணியுடன் வசித்து வந்தார்.
இவர் கடந்த 20-ந் தேதி இரவில் இருந்து காணவில்லை. இவரை தேடிப்பார்த்த போது பாசூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே சதீஷ்குமாரின் மொபட் மட்டும் அனாதையாக நின்று கொண்டு இருந்தது. இதனால் காளிங்கராயன் வாய்க்காலில் விழுந்து இருப்பாரோ என்ற சந்தேகத்தில் இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாசூர் பகுதியில் இருந்து பழனிக்கவுண்டன் பாளையம் வரையில் காளிங்கராயன் வாய்க்காலில் 21-ந்தேதி காலை முதல் மாலை வரை தேடினர்.
இதேபோல் கொடுமுடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பழனிக் கவுண்டம்பாளையம் முதல் கொடுமுடி வரை காளிங்கராயன் வாய்க்காலில் தேடியதில் எங்குமே உடல் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்ததனர்.
விசாரனையில் அது மாயமான சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் உடல் தான் என தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் இறந்த சதிஷ் குமாரின் உடலை கொடுமுடி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர்.