உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2022-12-27 09:39 GMT   |   Update On 2022-12-27 09:39 GMT
  • சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
  • காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

ஈரோடு:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News