புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு
- வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் மூலம் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் ஜூன் 12-ந் தேதி வரை 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வரட்டுப்பள்ளம் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.
இந்த நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறி யாளர் தமிழ்பரத், பாசன விவசாய சங்க தலைவர் நாகராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கவின் பிரசாத், இளைஞர் அணி வைத்தீஸ்வரன், மூலக்கடை லோகு, சங்கராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.