கொடிவேரி அணையில் குவிந்த பொதுமக்கள்
- கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
- கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காணப்பட்டது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை தினங்களில் அதிகளவில் வருகை தந்து குளித்து மகிழ்ந்து சென்று வருகிறார்கள்.
ஏப்ரல், ேம மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பேர் தினமும் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொடிவேரி தடுப்பணை பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வ ப்போது சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டுமே கூட்டம் ஓரளவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை விடு முறையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கொடி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அருவி யில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காண ப்பட்டது. சுற்றுலா பயணி கள் கொடிவேரி அணை பகுதியில் விற்பனையாகும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டனர்.