உள்ளூர் செய்திகள்

விவசாய அமைப்பினர் கோரிக்கை மனு

Published On 2023-09-30 09:30 GMT   |   Update On 2023-09-30 09:30 GMT
  • பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.
  • கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களை வாழ வைத்துக் கொண்டுள்ள பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சியை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடி பொதுமக்களின் குடிநீர், வாழ்வாதாரம் மற்றும் 4 லட்சம் ஏக்கர் பயிர்சாகு படிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கோடை காலத்தில், தென்மேற்கு பருவமழை பெய்யாத காலங்களில் கூட 2000 கனஅடிக்கும் அதிகமான அளவு தண்ணீர் வீணாக கடலை நோக்கி செல்வதாக நேரில் பார்த்து வந்த விவசாய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் வீணாக கடலுக்குள் செல்லும் பாண்டியாற்றை - பவானிசாகருக்கு வரும் மோயாற்றுடன் இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டுகள் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.

பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தின் சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படும் நன்மைகள், பாண்டியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேரடியாக பார்வையிட்ட போது ஓடிய தண்ணீர் அளவு உள்ளிட்ட விவரங்களை அப்போது விரிவாக எடுத்து கூறினர்.

மேலும் இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள வேண்டி பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்போது பணி நிறைவு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் ஆசைத்தம்பி, கீழ்பவானி முறைநீர்ப்பாசன சங்க கூட்டமைப்பின் இணைச்செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News