உறுப்பு, ரத்த தானம் குறித்து உறுதிமொழி
- தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
- பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்:
மத்திய அரசால் ஆயுஷ்மான் பவ என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சி யாக அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும்,
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், பாகுபாடு இன்றி எந்த உயிரிழப்பும் ஏற்படாத இருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
மேலும் நம் நாட்டில் உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்க தங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படுத்த கூடிய எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.