உள்ளூர் செய்திகள்

சிவகிரி பகுதியில் போலீசார் குவிப்பு-பரபரப்பு

Published On 2023-08-06 07:39 GMT   |   Update On 2023-08-06 07:39 GMT
  • விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.
  • இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மாரப்பன் பாளையம் கன்னிமார் தோட்டம் என்ற இடத்தில் எல். பீ .பி. வாய்க்கால் செல்கிறது

இந்த வாய்க்காலின் இடது கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 200 மீட்டருக்கு பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யபட்டு பணிகள் தொடங்கியது.

இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்த ப்பட்டது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மீண்டும் வாய்க்கால் பக்கவாட்டு தடுப்பு சுவர் வேலை தொடங்கப்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஈரோடு நீர்வள துறை செயற் பொறியாளர் திருமூர்த்தி, நீர்வள துறை உதவி செயற் பொறியாளர் ஜெய பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் விவ சாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் இங்கு கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை கைது செய்து சிவகிரி உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு டன் நீர்வளது றை உதவி பொறி யாளர் முருகேசன் முன்னி லை யில் தடுப்புச்சுவர் அமை க்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வாய்க்கா லின் இடது கரையில் பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க கான்கிரீட் சுவர் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

இதையடுத்து சிவகிரி பகுதியில் விவசாயி கள் ஒன்று திரண்டு இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்ப ட்டது.

Tags:    

Similar News