முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட விசைத்தறியாளர்கள் முடிவு
- மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய க்கோரி மனு அளிக்கப்பட்டது.
- திருப்பூர் வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார த்துறை மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும், மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடுமின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மின்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய க்கோரி மனு அளிக்கப்ப ட்டது.
தமிழ்நாடு மின்சா ரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலமாக சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து க்கேட்புக் கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று விசைத்தறி க்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து திருப்பூர் வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.47 உயர்த்த ப்பட்டுள்ள து.
இதன் காரணமாக தற்போது 31 சதவீதம் கட்டண உயர்வு ஏற்பட்டு ள்ளது. இதனால், விசை த்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு, மேலும் இதனை சார்ந்த ஜவுளித் தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்படலாம். ஏற்கனவே நூல் விலை ஏற்றம் காரணமாக ஜவுளி மற்றும் அதைச் சார்ந்து உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த மின்கட்டண உயர்வு என்பது விசைத்தறித் தொழிலை முற்றிலும் அழிக்கும் நிலையை ஏற்படுத்தும்.
எனவே முதல்-அமை ச்சரை நேரில் சந்தித்து விசைத்தறி மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பு களை எடுத்துக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ப டவுள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறி ப்பில் கூறப்பட்டு ள்ளது.