உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம்

Published On 2023-08-28 09:05 GMT   |   Update On 2023-08-28 09:05 GMT
  • ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தது
  • தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடும் பணி தீவிரம்

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர் மாவட்ட த்தில் உள்ள அனை த்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தப்பட்டது.

அப்போது ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மசாஜ் சென்டர் மேலாளரான ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 41) என்பவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்து வெளி மாநிலங்களை சேர்ந்த 4 பெண்கள், திருப்பூர் மாவ ட்டத்தை சேர்ந்த ஒரு பெண், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் என 20 வயது முதல் 26 வயதுடைய 6 இளம்பெ ண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

மசாஜ் சென்டரின் உரிமையாளர் கோவையைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர் போல் சென்ற ஒரு வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தி 6 பெண்களை மீட்டுள்ளனர். இதைப்போல் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களிலும் இனி வரும் காலங்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதலில் போதை கும்பலை ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்ய ப்பட்டனர். அதைத்தொடர்ந்து கள்ளச்சாரையும் விற்பவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News