உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவன் நீட் தேர்வில் 623 மதிப்பெண் பெற்று சாதனை

Published On 2023-06-15 07:38 GMT   |   Update On 2023-06-15 07:38 GMT
  • மாணவன் கமல் நாத் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
  • பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முருகேசன். விசைத்தறி கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி.

இவர்களது மகன் கமல் நாத். இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மாணவன் கமல் நாத் 720-க்கு 623 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவன் கமல் நாத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News