உள்ளூர் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
- நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சென்றனர்.
நம்பியூர்:
நம்பியூரில் நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை நெடுஞ்சாலைத் துறை கோபி கோட்ட பொறியாளர் ஜெய லட்சுமி தொடங்கி வைத்தார்.
பேரணியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு வேண்டும் உள்ளிட்ட வசங்களுடன் பதாகைகளை ஏந்தி நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்றனர்.
பேரணியில் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் விஜய லட்சுமி, கதிர்வேல், உதவி பொறி யாளர்கள் சந்தோஷ், வேந்தன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியா ளர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.