உள்ளூர் செய்திகள்

ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2022-08-30 10:12 GMT   |   Update On 2022-08-30 10:12 GMT
  • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
  • காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

பவானி:

பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் காளிங்கராயன் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த சில மாத ங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் ரோட்டோரம் இருந்த ஒரு சில மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

இந்த நிலையில் காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.இதேபோல் காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வெட்ட ப்பட்ட ஒரு மரத்தின் வேர் பகுதியை அப்புறப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதாக கூறப்படு கிறது.

இதனால் வேர் உள்ள இடத்தில் மீண்டும் மரம் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ரோடு சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே மரத்தின் வேரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ரோட்டோரங்களில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ள னர்.

Tags:    

Similar News