உள்ளூர் செய்திகள்
- பஞ்ச் பிபீ தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.
- பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாத்திமா நகரில் அமைந்துள்ள பஞ்ச் பிபீ தர்காவில் 4 ஆண்டுகள் கழித்து சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.
இதில் காலை கொடியே ற்றத்துடன் தொடங்கிய சந்த னக்கூடு திருவிழாவானது இரவு 8 மணி அளவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா காலத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சத்திய மங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, கோபி, ஈரோடு, பவானி, திருப்பூர், மேட்டூர், உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
4 ஆண்டுகள் கழித்து நடக்கும் சந்தனக்கூடு திருவிழா என்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.