சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு மயக்கம்:சமையலர் சஸ்பெண்டு
- அறிக்கையின் அடிப்படையில் அந்தியூர் தாசில்தார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- மேலும் சமையலர் வள்ளியம்மாளை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி யில் 157 மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை விஜய லட்சுமி உள்பட 5 ஆசிரி யர்கள் பணியாற்றி வரு கின்றனர். அத்தாணி பகுதி யை சேர்ந்த ஜவகர் என்பவர் சத்துணவு அமைப்பாளராகவும், கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையல ராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் வழக்கம் போல மதிய உணவு சாப்பிட சென்றனர். அவர்களுக்கு வெஜிடபிள் சாப்பாடு கொடுக்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக சமையலர் வள்ளியம்மா ளிடம் கூறினர். இதையடுத்து அவர் மற்ற மாணவர்களிடம் உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக பெற்றோரிடம் கூறினர். அப்போது மாணவர்கள் சிலர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர் கள் மீட்டு அத்தாணி கருவல்வாடி புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.
இந்த தகவல் பரவியதும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற் பட்ட மாணவர்களும் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
மேலும் அந்தியூர் அரசு மருத்துவ மனையில் 29 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த தும் அந்தியூர் தாசில்தார், கல்வி அதிகாரிகள் மற்றும் பவானி டி.எஸ்பி. ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதன் அறிக்கை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்தியூர் தாசில்தார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த அறிக்கையின் படி அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம் அந்த பள்ளி யின் சத்துணவு அமைப்பாளர் ஜவகர் என்பவரை பணியிடை மாற்றம் செய்து உத்தர விட்டார்.
மேலும் சமையலர் வள்ளியம்மாளை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.