உள்ளூர் செய்திகள்

ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

Published On 2023-11-18 07:59 GMT   |   Update On 2023-11-18 07:59 GMT
  • சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது.
  • மொத்தம் ரூ.80லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது.

இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 70-ம், இதே இன கிடாரிக் கன்றுகள் 50-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 60-ம், இதே இன கிடாரிகள் கன்றுகள் 100-ம் விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கத்தை விட மாடுகளின் வரத்து குறைந்திருந்ததால் விலையும் அதிகரித்து இருந்தது.

சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 52 ஆயிரம் வரையிலும் விற்றது.

சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரிக் கன்று ஒன்று ரூ.12 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்ப னை யானது.

மொத்தம் ரூ.80லட்ச த்துக்கு மாடுகள் விற்பனையாகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News