உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த முக மூடி கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2023-06-30 10:38 GMT   |   Update On 2023-06-30 10:38 GMT
  • முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது
  • அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்

அந்தியூர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47).மளிகை கடை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கத்தி முனையில் தங்கமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை முகமூடி அணிந்த மருமநபர் பறித்து சென்றார்.

இதையடுத்து முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் காலை முதல் நகை பறிப்பு சம்பவம் நடை பெற்றது வரை சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

மேலும் அந்தியூர் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளை இரவு 11 மணிக்கு மேல் மூடவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றார்கள். ஏனெனில் திருட்டு சம்பவம் நடைபெற்ற உடன் டீ கடையில் டீ குடிப்பது போல் அங்கு சென்று அமர்ந்து விடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசாருக்கு சிரமம் ஏற்படுவதால் டீக்கடை உரிமையா ளர்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News