உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்

Published On 2022-07-08 09:53 GMT   |   Update On 2022-07-08 09:53 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் சமீப காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் இருமல், சளி அறிகுறி இருப்ப வர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் அருகில் இருக்கும் மருத்து வமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து தடுப்பு நடவடி க்கையாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை.

இதேபோல் நமது மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. எனினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News