உள்ளூர் செய்திகள்

சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் திடீர் பள்ளம்

Published On 2023-09-07 08:59 GMT   |   Update On 2023-09-07 08:59 GMT
  • சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது
  • தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பவானி,

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து கோபி, கவுந்தப்பாடி வழி யாக செல்லும் சாலையில் பச்சப்பாளி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்கால் மேடு உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் பள்ளத்தில் கவுந்த ப்பாடியில் இருந்து சித்தோடு நோக்கி வந்து கொண்டு இருந்த சித்தோடு, தாய்நகர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி வெங்கடேசன் (52) நிலை தடுமாறி தான் ஓட்டி வந்த பைக் உடன் பள்ளத்தில் தவறி விழுந்து ள்ளார்.

இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரின் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிற்க்கு பொது மக்கள் தகவல் தெரிவி த்துள்ளனர். அவரின் உத்தர வின் பேரில் ஈரோடு எஸ்.பி. ஜவகர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை யினர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளுக்காக அப்போது அந்த பகுதியில் சாலையில் குறுக்கே குழாய் அமைக்கும் பணி நடைபெற்றதாகவும், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு அந்த வழியே சென்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பவானி சித்தோடு உட்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அம்மாபேட்டை ஹைவே ரோந்து பணி போலீசாராக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசு ப்பிரமணியம் (52) என்பவர் மீது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரம ணியம் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News