அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு
- இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
- வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மொடக்குறிச்சி,
ஈரோடு பெரிய வலசு அடுத்த திலகர் வீதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சக்திவேல் (21). மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள காலனி தெரு பகுதியைச் சேர்ந்த காட்டு ராஜா மகன் ராமன் (25). இருவரும் ஈரோட்டில் மெடிக்கல் துறையில் மார்க்கெட்டிங் பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மொடக்குறிச்சியில் தனது சொந்தப் பணிகள் காரண மாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை ராமன் ஓட்டி வந்தார். பின் பகுதியில் சக்திவேல் அமர்ந்து வந்தார்.அப்போது சின்னியம்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சக்திவேலும், ராமனும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி பலியானார்.ராமன் லேசான காயத்தோடு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து உறவி னர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.