கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவு
- கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது
- பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணி கள் வந்து செல்கிறார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் குடு ம்பத்துடன் வந்து தடுப்ப ணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை விடப்பட்டதால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து சென்றனர்.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொடி வேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடுவதும், குறைவ துமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். நேற்று முன்தினம் சனக்கிழ மை பொதுமக்களின் கூட்டம் குறைந்த அளவே இருந்தனர். இதே போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்ப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காண ப்பட்டது.
இதற்கிடையே கொடி வேரிக்கு வரும் பொதுமக்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதியில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்கள் பிளாஸ்க் பொருட்கள் எடுத்து செல் கிறார்களா? என்றும் மது மற்றும் தடை செய்ய்ப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா? என சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மேலும் போலீசார் சுற்றுலா பயணி கள் கொண்டு சென்ற பிளா ஸ்டிக் மற்றும் தடை செய்ய ப்பட்ட பொருட்களை பறி முதல் செய்த பிறகே அனு ப்பி வைத்தனர்.