நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் சாவு
- கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
- இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் ஆலு குழி காசியூர் நரியன் தோட் டத்தைச் சேர்ந்தவர் கருப்ப ணகவுண்டர் (வயது 76). இவருக்கு சுப்பாயாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.மேலும் சொந்தமாக 2 மாடு களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று கருப்பணகவுண்டர் மாடுகளை மேய்த்து விட்டு பின்னர் மாட்டு தொழு வத்திற்கு வரும்போது மாட்டின் கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கோ பியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகி ச்சைக்காக அைழத்து சென்றனர். பின்னர் அங்கு முத லுதவி பெற்று மேல்சிகி ச்சைக்காக ஈரோடு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கரு ப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் மாரிமுத்து (43) கடத்தூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.