உள்ளூர் செய்திகள்

ஈரோடு பெரிய மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

Published On 2022-12-06 09:53 GMT   |   Update On 2022-12-06 09:53 GMT
  • பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது
  • இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

ஈரோடு

ஈரோடு வ. உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு திண்டுக்கல், கிணத்துக்கடவு, மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், தாளவாடி, சத்தியமங்கலம். கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 3 டன் முருங்கை க்காய் லோடு வருவது வழக்கம்.

இந்நிலையை கடந்த சில நாட்களாக பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் முருங்கைக்காய் விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

இன்று மார்க்கெட்டிற்கு வெறும் அரை டன் முருங்கைக்காய் மட்டுமே வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.60-க்கு விற்ற முருங்கைக்காய் இன்று ரூ.160 முதல் ரூ.180 வரை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.

இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.

வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

பீன்ஸ்-30, வெண்டைக்காய்-30, கேரட்-60, பீட்ரூட்-60, கத்தரிக்காய்-70, புடல ங்காய்-40, பீர்க்கங்காய்-40, பாவைக்காய்-40, சுரைக்காய்-20, மிளகா-50, தக்காளி-ரூ.10 முதல் ரூ.15, சின்னவெங்காயம்-80, பெரியவெங்காயம்-40, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-40, உருளைக்கிழங்கு-40.

Tags:    

Similar News