உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது

Published On 2023-08-08 10:17 GMT   |   Update On 2023-08-08 10:17 GMT
  • ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது.
  • இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி வார சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள்.

சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது. தற்போது ஆடி 18 முடிவடைந்ததை ஒட்டி வியாபாரம் மீண்டும் மந்த நிலையில் நடைபெறுகிறது.

இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். தெலுங்கா னா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் மொத்த விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. சில்லரை விற்பனை 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக இருந்தது. ஆவணி மாதம் வரை வியாபாரம் சுமாராக இருக்கும் என்றும் அதன் பிறகு வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Tags:    

Similar News