பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71 அடியாக சரிந்தது
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.67 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
பவானி சாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.67 அடியாக சரிந்து உள்ளது.
அணைக்கு வினாடி 308 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்கா ல் பாசனத்தி ற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காளிங்கராயன் பாசனத்தி ற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.71 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 11.61 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98 அடியாகவும் உள்ளது.