கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- கொடிவேரி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநில ங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயனிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை யால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் அதிகளவில் வெளி யேற்ற ப்பட்டு வருகிறது.
இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்ெகடுத்து சென்றது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரியில் நேற்று குளிக்க தடை விதி க்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று மழை குறைந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் தடுப்பணையில் வழக்கம் போல் தண்ணீர் செல்கிறது.
இதையடுத்து தடை நீக்கப்பட்டு கொடிவேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இன்று வழக்கம் போல் பொதுமக்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து மகிழ்ச்சியுடன் குளித்து ரசித்து விட்டு சென்றனர்.